கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
அதன்படி, நாட்டில் 2017 முதல் 2021 வரையிலான 5 ஆண்டுகளில் மொத்தம் 28 ஆயிரத்து 572 விவசாயிகள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். ஆண்டு வாரியாக பார்க்கும் போது, 2017இல் 5,955 விவசாயிகளும், 2018இல் 5,763 பேரும், 2019இல் 5,957 பேரும், 2020இல் 5,579 பேரும், 2021இல் 5,318 பேரும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர்.
அரசின் புள்ளிவிவரப்படி ஆண்டுதோறும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மற்ற மாநிலங்களில் தற்கொலை விகிதம் குறைந்து வரும் நிலையில், மேற்கண்ட மாநிலங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக தெலங்கானாவில் கூட தற்கொலை குறைந்து வந்தாலும், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திராவில் இந்த எண்ணிக்கை குறையவில்லை என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த புள்ளி விவரங்கள் அனைத்து தேசிய குற்றப்பதிவு ஆணையம் தரவுகள் எனக் கூறிய அமைச்சர் இந்த தற்கொலைகளுக்கான குறிப்பான பின்னணி காரணங்கள் அதில் இல்லை என்றுள்ளது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் வருவாய் வழங்கவும், பசல் பீமா திட்டத்தின் கீழ் பயிர்க் காப்பீட்டு நலனையும் உறுதிப்படுத்த வேளாண் அமைச்சகம் முனைந்துள்ளதாக கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmers, Parliament, Suicide