Home /News /national /

மீண்டும் மெல்ல தலைத்தூக்கும் கொரோனா -10 மாநிலங்களில் அதிகரித்து வரும் பாதிப்பு

மீண்டும் மெல்ல தலைத்தூக்கும் கொரோனா -10 மாநிலங்களில் அதிகரித்து வரும் பாதிப்பு

மெல்ல தலைத்தூக்கும் கோவிட் பாதிப்பு

மெல்ல தலைத்தூக்கும் கோவிட் பாதிப்பு

Daily Covid update - கோவிட் பரவலை குறிக்கும் டெஸ்ட் பாசிடிவிட்டி ரேட் மீண்டும் 1 சதவீதத்தை தாண்டியுள்ளது.

    இந்தியாவில் கடந்த ஒரு வார காலத்தில் புதிதாக 25,000 கோவிட் பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்க வாரம் பாதிப்பு எண்ணிக்கை 45 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேவேளை, உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,158 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதை அடுத்து நாட்டின் மொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 81 ஆயிரத்து 335 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் 25,782 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 5 லட்சத்து 24 ஆயிரத்து 701ஆக உள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பத்து மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. அதேபோல் கொரோனா பரவலை குறிக்கும் டெஸ்ட் பாசிடிவிட்டி ரேட் மீண்டும் 1 சதவீதத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,500ஐ நெருங்கி வரும் நிலையில், அம்மாநில அரசு முகக்கவசத்தை மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது.

    மாநிலத்தில் தற்போது கோவிட் நான்காம் அலை ஏற்படலாம் என கூறியுள்ள அமைச்சர் ஆதித்யா தாக்ரே, அதே நேரத்தில் மக்கள் பீதி அடைய வேண்டியதில்லை, அரசு தாயர் நிலையில் உள்ளது என்றுள்ளார். சமீப காலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரபல நடிகர் ஷாருக் கான், அக்சய் குமார், கார்திக் ஆர்யன், அதித்ய ராய் கபூர் போன்றோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: எருமையின் உரிமையாளர் யார் என கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனை - காவல்துறை உத்தரவு

    பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த கோர்பேவாக்ஸ் பூஸ்டர் ஹேட்ரோலோகஸ் வகை தடுப்பூசி என்பதால் முன்னதாக எந்த நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், பூஸ்டராக இந்த கோப்ரேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் விலையை ரூ.250ஆக அந்நிறுவனம் குறைத்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Corona, CoronaVirus, Covid-19

    அடுத்த செய்தி