இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது - பிரதமர் மோடி

இந்தியாவின் பிரதமராக பிரதமர் மோடி மே 26-ம் தேதி பதவி ஏற்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது - பிரதமர் மோடி
மோடி
  • News18
  • Last Updated: May 23, 2019, 3:28 PM IST
  • Share this:
மக்களவைத் தேர்தலில் 348 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா மீண்டும் வெற்றிப்பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையான இன்று காலை முதல் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதனால், பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

எனவே இந்த வெற்றியை கொண்டாடும் படியாக ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இணைந்து முன்னேறுவோம். இணைந்து வளமை அடைவோம். இணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது! #VijayiBharat” எனக் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் பிரதமராக பிரதமர் மோடி மே 26-ம் தேதி பதவி ஏற்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...