ஹோம் /நியூஸ் /இந்தியா /

சிறுவர்களுக்கு தடுப்பூசி.. முதியவர்களுக்கு பூஸ்டர்- பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி.. முதியவர்களுக்கு பூஸ்டர்- பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

மோடி

மோடி

உலகிலேயே தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக தொடங்கி இந்தியா மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

இந்தியாவில் ஒமைக்ரான் (Omicron) தொற்று அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே நேற்று உரையாற்றினார். அப்போது பேசியவர் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும் ஜனவரி 3-ம் தேதி முதல் சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளதாக கூறினார்.

பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்:

 • உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கி உள்ளது. நாம் அனைவரும் கவனமுடன் செயல்பட வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை கழுவது என்பதை நாம் முறையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் யாரும் பதற்றம் அடைய தேவையில்லை.
 • இந்தியாவில் 18 லட்சம் கொரோனா படுக்கைகள் தயாராக உள்ளன. குழந்தைகளுக்கு 90,000 கொரோனா படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 • ஜனவரி 10-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும்
 • ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 15 முதல் 18 வயதினற்கு தடுப்பூசி போடப்படும்
 • உலகிலேயே தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக தொடங்கி இந்தியா மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் 90 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர்.
 • டெல்லி, உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
 • உலகிலேயே முதல்முறையாக டி.என்.ஏ. தடுப்பூசி பயன்படுத்த விரைவில் அனுமதி அளிக்கப்பட உள்ளது.
 • மூக்கு வழியாக செலுத்தும் சொட்டு மருந்துக்கும் அனுமதி அளிக்கப்படும். தடுப்பூசி திட்டம் விஞ்ஞான அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
 • 60 வயதை கடந்தவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் இந்த முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தப்படும்.
 • 18 லட்சம் படுக்கைகள், 5 லட்சம் ஆக்சிஜன் படுக்கைகள், 11.4 லட்சம் ஐசியு படுக்கைகள், 3000க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் ஆலைகள் இயக்கத்தில் உள்ளன.
 • மாநிலங்களுக்கு 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என்றார்.

First published:

Tags: Corona, Covid-19, Covid-19 vaccine, Modi, Omicron, PM Narendra Modi