ஹோம் /நியூஸ் /இந்தியா /

2047-ல் இந்திய பொருளாதாரம் 40 டிரில்லியன் டாலராக வளர்ச்சியை எட்டும்: முகேஷ் அம்பானி

2047-ல் இந்திய பொருளாதாரம் 40 டிரில்லியன் டாலராக வளர்ச்சியை எட்டும்: முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை தொடர்ந்து உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா மேலோங்கி இருக்கிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  இந்திய பொருளாதாரம் தற்போதைய நிலையில் இருந்து 13 மடங்கு அதிகரித்து, 40 டிரில்லியன் டாலராக வளர்ச்சி அடைய வாய்ப்பிருப்பதாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

  இந்தியா வளர்ச்சியை நோக்கி செல்வதாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்ச்சியும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவனத்தினுடைய தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

  பண்டிட் தீன்தயாள் எரிசக்தி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முகேஷ் அம்பானி, அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சியை தீர்மானிக்கும் சக்திகளாக, சுத்தமான ஆற்றல் புரட்சி (Clean energy Revolution), உயிரி ஆற்றல் புரட்சி (Bio energy Revolution) மற்றும் டிஜிட்டல் புரட்சி (Digital Energy) என இவை மூன்றும் தான் இருக்கப்போகிறது என தெரிவித்தார்.

  Also Read : நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா!

  மேலும், சுத்தமான ஆற்றல் உள்ள புரட்சியும், உயிரி ஆற்றல் புரட்சியும் நமக்கு தேவையான நிலையான ஆற்றலை உற்பத்தி செய்யும் அதே வேளையில், டிஜிட்டல் புரட்சியானது ஆற்றலை திறம்பட பயன்படுத்த நமக்கு உதவும். இந்த மூன்று புரட்சிகளும் இணைந்து இந்தியாவையும் உலகையும் காலநிலை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற உதவும்” என்று தெரிவித்தார்.

  மேலும், அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஜெர்மனியை தொடர்ந்து உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா மேலோங்கி இருப்பதாக தெரிவித்த அவர், தற்போது 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இருக்கும் இந்தியா, 2047 ஆம் ஆண்டில் 40 டிரில்லியன் டாலர்களை கொண்டுள்ள நாடாக வளர்ச்சி அடையும். அந்த வளர்ச்சி, இந்தியாவை டாப் 3 பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாக நிலைபெறச்செய்யும் என தெரிவித்தார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Economy, Indian economy, Mukesh ambani, World economy