கொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை

கொரோனா தொற்றிலிருந்து உலகம் விடுபட இந்தியா உதவி புரியும்: ஐநாவில் பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடி
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2020, 9:09 PM IST
  • Share this:
ஐ.நா.வின் 75-வது ஆண்டு விழா மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவில் இருந்து மனித குலத்தை காப்பதில் இந்தியாவின் பெரும்பங்கு இருக்கும் என கூறியுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மெய்நிகர் தொழில்நுட்ப உதவியுடன் உரையாற்றினார்

3-ஆம் உலகப்போரை நாம் வெற்றிகரமாக தவிர்த்துவிட்டாலும், வேறு பல போர்கள் நடந்திருப்பதை நாம் மறுக்க முடியாது என கூறினார்.


தீவிரவாத தாக்குதல்கள் இந்த உலகை உலுக்கியுள்ளதாக வேதனை தெரிவித்தார். இந்திய மக்கள் ஐ.நா. சபை மீது வைத்திருக்கும் நம்பிக்கை, மரியாதை இணையற்றது எனவும், ஐ.நா.வின் செயல்பாடுகளில் சீர்திருத்தங்களை கொண்டுவருவது காலத்தின் தேவை எனவும் மோடி கூறினார். ஐ.நா.வின் லட்சியமும், இந்தியாவின் அடிப்படைத் தத்துவமும் ஒன்றே எனக் கூறிய மோடி, இந்தியர்கள் உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகவே கருதுவதாக பெருமிதம் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் காக்க இந்தியாவின் தடுப்பு மருந்து உற்பத்தி உதவி செய்யும் என உறுதியளிப்பதாக பிரதமர் மோடி கூறினார். இந்த இக்கட்டான காலத்தில் இதுவரை 150 நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை இந்தியா அனுப்பியுள்ளதாக கூறினார்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading