கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்... மோடி சூளுரை

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்... மோடி சூளுரை
பிரதமர் மோடி
  • Share this:
சி.ஐ.ஐ எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு, "வளர்ச்சியை மீண்டும் பெறுதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இதில், கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் எனவும், பொருளாதார மீட்பே நமது முதன்மை இலக்கு எனவும் உறுதி அளித்தார். தற்சார்பு இந்தியா தான் நம்முன் இருக்கும் ஒரே வழி என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், உலகத்திற்கு தேவையான பொருட்களை நாம் தயாரிக்க வேண்டிய காலம் இது எனவும் பேசியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வதாகவும், கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் 74 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளதாகவும் மோடி கூறினார்.


Also read... சிறைக்கைதிகள் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உள்ளது..? அரசிடம் அறிக்கை கேட்கும் நீதிமன்றம்










Also see...
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading