ஹோம் /நியூஸ் /இந்தியா /

CAA - விவகாரம் குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: நழுவிய டிரம்ப்

CAA - விவகாரம் குறித்து இந்தியாவே சரியான முடிவு எடுக்கும்: நழுவிய டிரம்ப்

டிரம்ப்

டிரம்ப்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கருத்து கூறவிரும்பவில்லை. CAA விவகாரம் குறித்து இந்தியாவே நல்ல முடிவை எடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘50-100 ஆண்டுகளில் இந்தியா உலகின் முக்கிய சக்தியாக திகழும். இந்தியா தனிச்சிறப்புடைய எதிர்காலத்தைக் கொண்டிருக்கும். எங்களுக்கு மிக அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது. ஹார்லே டேவிட்சன் இந்தியாவுக்கு மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்யும்போது மிகஅதிக அளவில் வரி செலுத்தவேண்டியுள்ளது. ஆற்றல் குறித்து இந்தியாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். 21,000 கோடி ரூபாய்க்கு பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. தாலிபானுடனான எங்களுடைய ஒப்பந்தம் குறித்து அனைவரும் சந்தோசம் அடைந்துள்ளனர்.

இந்தியாவும் இந்த விவகாரத்தை விரும்பும். நாங்கள் ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவருகிறோம். ஆஃப்கானிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து மோடியுடன் பேசினேன். லட்சக்கணக்கான இளைஞர்களைக் கொல்வதை நான் விரும்பவில்லை. தீவிரவாதத்துக்கு எதிராக நான் சண்டையிட்ட அளவுக்கு வேறுயாரும் சண்டை நடத்தியிருக்க மாட்டார்கள். மோடியுடன் நான் மதச் சுதந்திரம் பேசினேன். பிரதமர் மோடியும் மதச் சுதந்திரத்தை நம்புகிறார். டெல்லியில் நடைபெற்றுவரும் கலவரம் குறித்து கேள்விபட்டேன். ஆனால், அதுகுறித்து மோடியுடன் விவாதிக்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கருத்துகூறவிரும்பவில்லை.

இந்த விவகாரம் இந்தியாவே சரியானதைச் செய்யும். காஷ்மீர் மக்கள் மீது நீண்ட காலமாக முள்கள் வீசப்பட்டுள்ளன. எல்லா கதைகளுக்கும் இரு பக்கங்கள் உள்ளன. இன்று தீவிரவாதம் குறித்து நீண்ட நேரம் உரையாடினோம். பாகிஸ்தானிலிருந்து வரும் தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து நீண்ட நேரம் பேசினோம். அது பிரச்னைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இம்ராம் கான் மற்றும் நரேந்திர மோடி இருவருடனும் எனக்கு நல்ல உறவு உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இருநாடுகளுக்கும் சமரசம் செய்வதற்கு தயாராக உள்ளேன்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published:

Tags: Trump India Visit