எல்லைத் தாண்டிய தாக்குதலை நிறுத்துங்கள்... பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பிறந்து பத்து மாதமே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்தது

news18
Updated: July 31, 2019, 5:43 PM IST
எல்லைத் தாண்டிய தாக்குதலை நிறுத்துங்கள்... பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பிறந்து பத்து மாதமே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்தது
news18
Updated: July 31, 2019, 5:43 PM IST
எல்லைத் தாண்டி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைத் தாண்டி இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பிறந்து பத்து மாதமே ஆன குழந்தை ஒன்று உயிரிழந்தது. இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 பேர் உயிரிழந்தனர்.


இதுதொடர்பாக வெளியுறவுத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பாகிஸ்தானை இந்தியா எச்சரித்துள்ளது. மேலும், ‘பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம். எல்லைத் தாண்டி அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என’ தெரிவிக்கப்பட்டுள்ளது

Also watch

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...