“Ex VINBAX 2022”, வியட்நாம்-இந்தியா இருதரப்பு ராணுவப் பயிற்சியின் 3வது பதிப்பு ஆகஸ்ட் 1 முதல் 20 வரை சண்டிமந்திரில் நடத்தப்பட உள்ளது.
2019 இல் வியட்நாமில் நடத்தப்பட்ட இருதரப்புப் பயிற்சியின் தொடர்ச்சியாகவும், இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் இந்தப் பயிற்சி உள்ளது. இந்த பயிற்சியின் மூலம் இரு நாடுகளும் ஒரு விரிவான மூலோபாய கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன.பாதுகாப்பு ஒத்துழைப்பு இந்த கூட்டாண்மையின் முக்கிய தூணாக இது விளங்கும். இந்தியாவின் கிழக்கு கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் பார்வையில் வியட்நாம் ஒரு முக்கிய நாடாக உள்ளது.
Ex VINBAX 2022 இன் கருப்பொருள் ஐக்கிய நாடுகள் குழுவின் ஒரு பகுதியாக ஒரு பொறியியல் மற்றும் ஒரு மருத்துவக் குழுவை பணியமர்த்தல் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பணிகளில் துருப்புக்களை அனுப்புவதில் இந்தியா வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
ராம்சார் தளத்தில் புதிதாக இணைந்த இந்தியாவின் 5 ஈரநிலங்கள்
தந்திரோபாயம், செயல்பாடு மற்றும் மூலோபாய மட்டங்களில் வருங்கால ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் வீரர்களுக்கு சிறந்த நடைமுறைகள் மற்றும் பயிற்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகளின் அமைதி நடவடிக்கை பயிற்சியை வழங்குவதற்கான சிறந்த திறன்களை இந்தியா கொண்டுள்ளது. அதை இந்த ராணுவப்பயிற்சியின் மூலம் மேம்படுத்த முடியும்.
இருதரப்புப் பயிற்சியின் முந்தைய பதிப்புகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட களப் பயிற்சியாக இந்தப் பயிற்சி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரஸ்பர நம்பிக்கையையும், இடை-செயல்திறனையும் வலுப்படுத்தும் மற்றும் இந்திய ராணுவம் மற்றும் வியட்நாம் மக்கள் ராணுவம் இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள உதவும் என்று செய்தி குறிப்புகள் கூறுகின்றன.
இந்த கூட்டுப் பயிற்சியானது இரு படைகளின் துருப்புக்களும் ஒருவருக்கொருவர் சமூக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கும். இந்திய ராணுவத்தின் 105 பொறியாளர் படைப்பிரிவைச் சேர்ந்த துருப்புக்கள் இதில் பங்கேற்கும்.
ராஜஸ்தான் தாரா காட்ஸ் வனப்பகுதியில் ரம்மியமாக செல்லும் ரயில்.. வைரலாகும் வீடியோ
48 மணி நேர இந்த பயிற்சியானது, ஐநா பணிகளில் இதே போன்ற சூழ்நிலைகளின் கீழ் தொழில்நுட்ப இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு குழுக்களாலும் அடையப்படும் தரநிலைகளை மதிப்பிடுவதற்கான அட்டவணையின் ஒரு பகுதியாகும்.
இது தவிர, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண செயல்விளக்கம் மற்றும் உபகரணக் காட்சி இருக்கும். இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களின் போது உள்நாட்டு தீர்வுகளைப் பயன்படுத்தி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.