45 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம் - ஒத்துக்கொண்ட மத்திய அரசு

கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசின் ஆட்சி கீழ் வேலைவாய்ப்பினை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

45 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம் - ஒத்துக்கொண்ட மத்திய அரசு
வேலை வாய்ப்பின்மை
  • News18
  • Last Updated: June 1, 2019, 12:13 PM IST
  • Share this:
மத்திய புள்ளியியல் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின் படி 2017-2018 நிதியாண்டில், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு ஜனவரி மாதம் ஊடகங்களில் கசிந்த வேலைவாய்ப்பின்மை குறித்த தகவல்களை, சில அமைச்சர்கள் மறுத்த நிலையில், தற்போது மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தரவுகளும் முன்னர் வெளியான தகவல்களும் ஒத்துப்போகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசின் ஆட்சி கீழ் வேலைவாய்ப்பின்மை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.


இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அதை உறுதி செய்கின்றன. தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலின் படி நகர் புறங்களில் 7.8 சதவீதம் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளார்கள் என்றும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதம் இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆண், பெண் விகிதாசரத்தில், ஆண்களில் 6.2 சதவீதத்தினரும், பெண்களில் 5.7 சதவீதத்தினரும் வேலை இல்லாமல் உள்ளார்களாம்.

தொடர்ந்து இரண்டாம் முறையாக மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான அரசு நேற்று முதல் பொறுப்புகளை எற்றுள்ளது.ஆனால் முதல் நாளே ஜிடிபி சரிவு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு போன்ற தரவுகள் வெளியாகி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே புதிதாக அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு இவற்றைச் சரிசெய்வது மிகுந்த சவாலாகவே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள்

மேலும் பார்க்க:
First published: June 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading