முகப்பு /செய்தி /இந்தியா / அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய புலனாய்வு அமைப்புகள் செயல்படுகின்றன: பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய புலனாய்வு அமைப்புகள் செயல்படுகின்றன: பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

அதே சமயம் பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் சேரும் உறுப்பினர்கள் மீதான வழக்கின் நிலை மந்தநிலையே இருந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

எதிர்க்கட்சிகள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக 9 எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

முன்னதாக, கலால் வரி கொள்கையில் வரம்பு மீறியதாக டெல்லி துணை முதல்வர் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. எந்தவித  ஆதாரமும் இல்லாமல் மனிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுளளதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அம்மாமில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில், "தற்போது வரை இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறோம். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்துவது மூலம்,  ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டோம் என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், 2014க்கு பிந்தைய நாட்களில், மத்திய புலனாய்வு அமைப்புகளால் வழக்குப் பதிவு, விசாரணை, கைது  செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானோர் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், அதே சமயம் பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் சேரும் உறுப்பினர்கள் மீதான வழக்கின் நிலை மந்தநிலையே இருந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் சமயத்தில் எதிர்கட்சியினர் மீது வழக்கு தொடர்வது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடிக்கு அனுப்பிய இந்த கடிதத்தில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகிய எதிர்க்கட்சி முதல்வர்கள் கையெழுத்திட்டனர். மேலும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே,  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்: தொடங்கி வைத்த மத்திய பிரதேச முதல்வர்

அதே சமயம், அகில இந்திய காங்கிரஸ், திமுக, நிதிஷ் குமாரின் இந்திய ஜனதா தளம், குமாராசாமியின் ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடிதத்தில் கையெழுத்திடவில்லை.

First published:

Tags: Arvind Kejriwal, Modi