உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாகவும் அரிசி, கோதுமை ஆகியவற்றை விட அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர
மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் பால் பண்ணையின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். அப்போது உரையாற்றிய மோடி, உலகளவில் பால் உற்பத்தியில் தற்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது.
பல கோடி விவசாயிகளின் வாழ்வாதாரம் பால் உற்பத்தியை சார்ந்துள்ள நிலையில், இந்தியா ஆண்டொன்றுக்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாலை உற்பத்தி செய்து வருகிறது. கிராமங்களின் பரவலாக்கப்பட்ட பொருளாதார அமைப்பு இதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது. கோதுமை மற்றும் அரசியின் விற்பனை கூட ரூ.8.5 லட்சம் கோடிக்கு சமமாக இல்லை.

பிரதமர் நரேந்திர மோடி
மேலும், பால் உற்பத்தி துறையின் மிகப்பெரிய பயனாளிகளாக சிறு விவசாயிகள் உள்ளனர். புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் டெய்ரியின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை ஆகியவை உள்ளூர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதோடு அப்பகுதியில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று கூறினார்.
இதையும் படிங்க: மணமேடையில் இருந்து திடீரென ஓட்டம் பிடித்த மணப்பெண்... வைரலாகும் வீடியோ - கேரளாவில் பரபரப்பு
பனாஸ் சமூக வானொலி நிலையம் மற்றும் பாலன்பூரில் பாலாடைக்கட்டி பொருட்கள் மற்றும் மோர் தூள் உற்பத்திக்கான விரிவாக்கப்பட்ட வசதிகள் மற்றும் டாமாவில் நிறுவப்பட்ட கரிம உரம் மற்றும் உயிர்வாயு ஆலை ஆகியவற்றையும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.