டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் கொள்கை பகுப்பாய்வு மையம் (CPA), அதன் முதல் உலகளாவிய சிறுபான்மை அறிக்கை வெளியிட்டுள்ளது. மத சிறுபான்மையினரை நடத்தும் விதத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளை இந்திய அமைப்பு மதிப்பிட்டது இதுவே முதல் முறை.
இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது மனித உரிமைகள், சிறுபான்மையினர், மத சுதந்திரம் மற்றும் மத சிறுபான்மையினரின் கலாச்சாரம், மத வேறுபாடுகள் ஆகியவற்றின் கருத்தியல் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டது.
110 நாடுகளில் ஆராய்ந்து எடுத்த மத சிறுபான்மையினரை சிறப்பாக நடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதேபோல் மத சிறுபான்மையினரை அரசியல் மற்றும் சமூக கொள்கைகளில் உள்ளடக்கியவர்களின் பட்டியலிலும் இந்தியா முதலிடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :குஜராத் தேர்தல் - முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரம் ஓய்வு
அதே வரிசையில் அமெரிக்கா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. நேபாளம் 39வது இடத்திலும், ரஷ்யா 52வது இடத்திலும் உள்ளன. சீனா மற்றும் வங்கதேசம் முறையே 90 மற்றும் 99வது இடத்தில் உள்ளன. இந்த அறிக்கையில் பாகிஸ்தான் 104வது இடத்திலும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் 109வது இடத்திலும் உள்ளது.
“ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நிலைமையை முன்வைக்கும் சில வினோதமான சம்பவங்களின் அடிப்படையில் , பிற சர்வதேச அறிக்கைகளின் அடிச்சுவடுகளை, உலக சிறுபான்மை அறிக்கை பின்பற்றவில்லை" என்று CPA தனது அறிக்கையில் கூறுகிறது.
"இந்தியாவின் சிறுபான்மைக் கொள்கை மாதிரியானது மக்கள் சமூகத்தின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு இடையே, நிகழும் பிரச்சனைகளில் சரியான சமமான முடியுள் வருகிறதா என்று கேட்டல் அதில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. இது இந்தியாவின் சிறுபான்மைக் கொள்கையை மெம்பருத்த அதை மறு ஆய்வு செய்ய வித்திடுகிறது" என்று CPA இன் செயல் தலைவர் துர்கா நந்த் ஜா கூறினார்.
இந்த அறிக்கை , ஒவ்வொரு நாடும் சிறுபான்மை உரிமைகள் தொடர்பான வருடாந்திர சிறுபான்மை உரிமைகள் இணக்க அறிக்கையை சமர்பிப்பதை கட்டாயமாக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு (UN) பரிந்துரைத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Analysis Report, Venkaiah Naidu