• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 92 நாட்களில் 12 கோடி பேருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடு இந்தியா - மத்திய அரசு பெருமிதம்

92 நாட்களில் 12 கோடி பேருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடு இந்தியா - மத்திய அரசு பெருமிதம்

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 92 நாட்களில் 12 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு இந்தியா புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. இதேபோன்ற சாதனையை அமெரிக்கா 97 நாட்களிலும், சீனா 108 நாட்களிலும் நிகழ்த்தியது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா 26 லட்சம் பேருக்கு அதிகமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தமாக 122,622,590 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகமுள்ள மாநிலங்களில், மக்கள் அதிகளவில் தடுப்பூசி போடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 36% தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, மத்திய பிரேதசம், கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 59.5% தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த ஜன.16ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, 2வது கட்டம் கடந்த மார்ச்1ம் தேதி தொடங்கப்பட்டது. அப்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, ஏப்.1ம் தேதி 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: