Home /News /national /

சர்வதேச பயணத்தை எளிதாக்க விரைவில் இ-பாஸ்போர்ட்...மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு

சர்வதேச பயணத்தை எளிதாக்க விரைவில் இ-பாஸ்போர்ட்...மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

E-Passport | பாஸ்போர்ட் சேவைகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியதன் அவசியம் காரணமாக பாஸ்போர்ட் சேவா திட்டம் (Passport Seva Programme), வெகுவிரைவில் PSP V2.0-ஐ தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்திய மக்கள் மேற்கொள்ளும் சர்வதேச பயணத்தை எளிதாக்கவும், அடையாள திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் டேட்டாக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்கும் இ-பாஸ்போர்ட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஸ்போர்ட் சேவா திவாஸ் தினத்தை முன்னிட்டு இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.

    குடிமக்களின் அனுபவத்தையும் பொது விநியோகத்தையும் மேம்படுத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதையும் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார். பாஸ்போர்ட் சேவா திவாஸ் தொடர்பான விழாவில் பங்கேற்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய பாஸ்போர்ட் அமைப்புடன் இணைந்து இந்திய வெளியுறவு அமைச்சகம் நம் நாட்டு குடிமக்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை சரியான நேரத்தில், நம்பகமான, அணுகக்கூடிய, வெளிப்படையான மற்றும் திறமையான முறையில் வழங்குவதற்கான உறுதிப்பாட்டை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது.

    கோவிட்-19 தொற்று தீவிரமாக இருந்த சோதனையான காலகட்டத்திலும் கூட பாஸ்போர்ட் தொடர்பான சேவைகள் சிறப்பாக வழங்கப்பட்டதையும் அமைச்சர் ஜெய்சங்கர் நினைவு கூர்ந்தார். இதுதொடர்பாக விழாவில் பேசிய அமைச்சர், கோவிட்-19 தொற்று தீவிரமாக இருந்த நேரங்களிலும் பாஸ்போர்ட் சேவைகள் அதே வீரியம் மற்றும் உற்சாகத்துடனும் வழங்கப்பட்டன என்பதை குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

    தொற்றுநோயால்  அதிகரித்த தேவையை கையாளும் போது, கடந்த ஒரு மாதத்தில் 4.50 லட்சம் கூடுதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நிலையில், சராசரியாக 9 லட்சம் என்ற மாதாந்திர சராசரியுடன் சாதனை படைக்கப்பட்டு உள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் குடிமக்களுக்கான பாஸ்போர்ட் விதிகள் மற்றும் நடைமுறைகளை எளிமையாக்கும் முயற்சிகளில் அரசு மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.



    பாஸ்போர்ட் டெலிவரி நேரத்தை சீராக்க விரைவாக போலீஸ் வெரிஃபிகேஷன் செய்து முடிக்கமாநிலங்கள்/யூனியன் பிரதேச போலீசாருடன் இணைந்து வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. mPassport போலீஸ் ஆப் இப்போது 8275 காவல் நிலையங்களை உள்ளடக்கிய 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகிறது என்றார்.

    டிஜிலாக்கர் அமைப்புடன் பாஸ்போர்ட் சேவா சிஸ்டம் ஒருங்கிணைக்கப்பட்டு காகிதமில்லா ஆவணமாக்கல் செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது. அதே போல தபால் துறையுடன் இணைந்து எங்களது அமைச்சகம் 428 தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களை நமது குடிமக்களின் வீட்டு வாசலில் சென்றடையச் செய்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள 178 தூதரகங்கள் மற்றும் தூதரகங்களில் பாஸ்போர்ட் வழங்கும் முறைகளை அமைச்சகம் வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளது என்றும் கூறினார்.

    Also Read : FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடப்படுவதாக பரவும் வீடியோ - உண்மை என்ன

    பாஸ்போர்ட் சேவைகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டியதன் அவசியம் காரணமாக பாஸ்போர்ட் சேவா திட்டம் (Passport Seva Programme ), வெகுவிரைவில் PSP V2.0-ஐ தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது PSP V1.0-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தரப்படுத்தப்பட்ட மற்றும் தாராளமயமாக்கப்பட்ட செயல்முறைகள், செயற்கை நுண்ணறிவு, சாட்-போட், அட்வான்ஸ் அனலிட்டிக்ஸ் போன்ற லேட்டஸ்ட் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சிறப்பான நாட்டுபவத்தை உறுதி செய்யும். இதற்கிடையில் தான் சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் இந்திய குடிமக்களுக்கான இ-பாஸ்போர்ட்டுகளை வெளியிடவும் அமைச்சகம் தயாராகி வருவதாக அமைச்சர் கூறி இருக்கிறார்.
    Published by:Selvi M
    First published:

    Tags: India, Passport

    அடுத்த செய்தி