2021 – 2023 வரையிலான காலத்தில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப 4 நாடுகளுடன் 6 ஒப்பந்தங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கையெழுத்திட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ஜிதேந்திர சிங் கூறியிருப்பதாவது, 2021 – 2023 வரையிலான காலத்தில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப 4 நாடுகளுடன் 6 ஒப்பந்தங்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கையெழுத்திட்டுள்ளது. வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவுதல் மூலம் 132 மில்லியன் யூரோ வருமானம் (இந்திய மதிப்பில் ரூ. 1140 கோடி) கிடைக்கும்.
இதையும் படிங்க : Omicron Virus | டெல்டாவை விட 70 மடங்கு வேகமாக பரவும் ஒமைக்ரான்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்திய விண்வெளி துறையின் கீழ் இயங்கும் இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் வணிக ரீதியில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை PSLV ராக்கெட் மூலம் அனுப்பி வருகிறது. மாணவர்கள் தயாரித்த 12 செயற்கைக்கோள்கள் உள்பட 124 உள்நாட்டு செயற்கைக்கோள்கள் புவி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
1999 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 34 நாடுகளின் 342 செயற்கைக்கோள்கள் PSLV ராக்கெட் மூலம் வணிக ரீதியில் ஏவப்பட்டுள்ளன.
இந்திய ராக்கெட் மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம், 2019- 2021 வரையிலான இந்த 3 ஆண்டுகளில் இந்தியா அந்நிய செலாவணியாக 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோவை வருமானமாக பெற்றுள்ளது.
இதையும் படிங்க : ''11 வயதில் ஆபாச படம் பார்க்க ஆரம்பித்தேன். அது என்னை...'' - அனுபவம் பகிர்ந்த பிரபல பாடகி
இவ்வகை வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் புவி கண்காணிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்காக இந்திய ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இதில் அதிகபட்சமாக அமெரிக்காவை சேர்ந்த 226 செயற்கைக்கோள்களும், இங்கிலாந்து, கனடாவை சேர்ந்த தலா 12 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : International Space Station | விண்வெளிக்கு சென்று உணவு ஆர்டரை டெலிவரி செய்த கோடீஸ்வரர்... வைரல் வீடியோ
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ISRO