ஜூலை மாத இறுதியில் விண்வெளி போருக்கான ஒத்திகையை செய்து பார்க்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
ராணுவம், உழவு, புவிசார் கண்காணிப்பு, தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறை சார்ந்த செயற்கைக் கோள்களை இந்தியா விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. இந்த செயற்கைக் கோள்களை மற்ற நாடுகள் தாக்கி அழிப்பது விண்வெளிப் போர் என அழைக்கப்படுகிறது.
மிஷன் சக்தி என்ற பெயரில் நமது நாட்டின் செயற்கைக்கோளை எதிரிகள் அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனையை மார்ச்சில் இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 300 கி.மீ., உயரத்தில் இருந்த செயற்கைகோளை ஏசாட் ஏவுகணை மூலம் 3 நிமிடங்களில் சுட்டு வீழ்த்தி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியும் அறிவித்தார்.
இதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி போர்த்திறன் படைத்த நாடுகள் பட்டியலில் 4-வது நாடாக இந்தியா இடம்பிடித்தது. இந்த வரலாற்று சாதனையின் அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற இந்தியா திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஜூலை மாத இறுதியில் விண்வெளியில் போர் ஒத்திகை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மூலமாக இந்த ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இதற்காக விண்வெளிப் போரில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு மெய்நிகர் தொழில்நுட்பம் மூலமாக செயல்படுத்த உள்ளனர்.
3 நாட்களுக்கு முன்பு கப்பலில் இருந்து 7 செயற்கைக்கோள்களைக் கொண்ட ராக்கெட்டை சீனா விண்ணில் ஏவிய நிலையில், இந்திய விண்வெளி பாதுகாப்பு மற்றும் ஆய்வு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் ‘மிஷன் சக்தி’ உரை விதிமீறலா? தேர்தல் ஆணையம் விளக்கம்
Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.