முப்படைகளுக்கும் இனி ஒரே தலைவர்! மோடி அறிவிப்புக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் வரவேற்பு

கார்கில் போருக்கு பின் பாதுகாப்புப் படை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, பாதுகாப்புப் படைகளுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒரே தலைவரை நியமிக்க பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 16, 2019, 9:13 AM IST
முப்படைகளுக்கும் இனி ஒரே தலைவர்! மோடி அறிவிப்புக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் வரவேற்பு
மோடி
Web Desk | news18
Updated: August 16, 2019, 9:13 AM IST
நாட்டை பாதுகாக்கும் முப்படைகளுக்கும் இனி ஒருவரே நிரந்தர தலைவராக இருப்பார் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

முப்படைகளுக்கும் ஒரே தலைமை என்ற அறிவிப்பை சுதந்திர தின உரையில் வெளியிட்ட பிரதமர் மோடி தேசப் பாதுகாப்பை இது மேலும் வலுப்படுத்தும் என அறிவித்துள்ளார்.

தற்போது ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளுக்கு தனித்தனி தலைமை அதிகாரிகள் உள்ளனர். இவை மூன்றையும் உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு செயலாளராக மூத்த சிவில் சர்வீஸ் அதிகாரியும் இருந்து வருகின்றார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர், முப்படை அதிகாரிகளுக்கு போர் குறித்து உத்தரவிடுவதா என்ற கேள்வி நெடுநாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு தற்போது விடை காணப்பட்டுள்ளது.

கார்கில் யுத்தத்தின்போது ராணுவத் தளபதியாக இருந்த வி.பி. மாலிக், பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். இது தொடர்பான ட்விட்டர் பதிவில், தேசிய பாதுகாப்பை மேலும் செம்மைப்படுத்தும் என்றும் ஒருங்கிணைப்பை அதிகரிப்பதுடன். செலவையும் பெருமளவில் குறைக்கும் என பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதை மேலும் சில முன்னாள் அதிகாரிகளும் வரவேற்றுள்ளனர்.

கார்கில் போருக்கு பின் பாதுகாப்புப் படை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, பாதுகாப்புப் படைகளுக்கு 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒரே தலைவரை நியமிக்க பரிந்துரைத்திருந்தது.

இதே கருத்தை 2012-ல் வலியுறுத்திய நரேஷ் சந்திரா சிறப்புக் குழு, முப்படைகளின் தலைவர்களில் யார் மூத்த அதிகாரியோ அவரே தலைமை அதிகாரியாக இருக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் இந்த பரிந்துரையை வெகுவாக வரவேற்றிருந்தார்.

நாடாளுமன்றத்தில் 2018-ல் எழுப்பப்பட்ட இது பற்றிய கேள்விக்கு நரேஷ் சந்திரா குழு பரிந்துரையையும், 2001-ல் அமைச்சர்கள் குழு தெரிவித்த அதே பரிந்துரையையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியிருந்தது.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு அரசியல் கட்சிகள், பாதுகாப்பு படையினர், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் ஒருமித்த கருத்து ஏற்படாததால், இந்த திட்டம் அமல்படுத்தபடவில்லை. இந்நிலையில்
நாடாளுமன்றத்தில் பல்வேறு தரப்பினர் எழுப்பி வந்த பிரச்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Also see... மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது நமது கடமை: பிரதமர் மோடி சுதந்திர தின உரை





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...