• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எங்கிருந்து ஆபத்து வந்தாலும் அதனை சமாளிக்க முப்படைகளும் தயாராக உள்ளனர்: ராஜ்நாத் சிங்

எங்கிருந்து ஆபத்து வந்தாலும் அதனை சமாளிக்க முப்படைகளும் தயாராக உள்ளனர்: ராஜ்நாத் சிங்

எங்கிருந்து ஆபத்து வந்தாலும் அதனை சமாளிக்க முப்படைகளும் தயாராக உள்ளனர்: ராஜ்நாத் சிங்

எங்கிருந்து ஆபத்து வந்தாலும் அதனை சமாளிக்க முப்படைகளும் தயாராக உள்ளனர்: ராஜ்நாத் சிங்

நிலம், நீர், ஆகாயம் என எங்கிருந்து ஆபத்து வந்தாலும் அதை சமாளிக்க முப்படைகளும் தயாராக உள்ளனர் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தேசிய பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று உரையாற்றியுள்ளார். அதில், காபூலின் பாதுகாப்பு நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. எந்த சூழலையும் எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளது. நிலம், நீர், ஆகாயம் என எங்கிருந்து ஆபத்து வந்தாலும் அதை சமாளிக்க முப்படைகளும் தயாராக உள்ளன.

    இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உருவாக்க ஆப்கானிஸ்தானின் நெருக்கடியை யாரும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய விரும்புகிறது.

    ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அரசு அக்கறை கொண்டுள்ளது, அதே நேரத்தில் நமது எல்லைகளில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு நாடும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி விடக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    Also read: 'விக்ரஹா' ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

    கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் நடந்து ஒராண்டு கடந்துவிட்டது. இந்திய ராணுவத்தின் தைரியம், வீரம் மற்றும் கட்டுப்பாடு ஒப்பிடமுடியாதது. வருங்கால சந்ததியினர்கள் நமது வீரர்களை நினைத்து பெருமைப்படுவார்கள். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து பல தேச விரோத சக்திகள் எல்லைகளில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்க முயற்சித்து வருகின்றன.

    பாகிஸ்தான் எல்லைகளில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வரும் என்று நான் நம்புகிறேன். பிரிவு 370 மற்றும் 35ஏ ரத்து செய்ததன் மூலம் பிரிவினைவாத சக்திகள் வலிமை குறைந்துவிட்டது.

    நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சில புதிய அச்சுறுத்தல்கள் தோன்றியுள்ளன. ஜம்மு விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய சவால்களுக்காக தேசிய பாதுகாப்பு அமைப்பை நாம் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.

    ​​பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு எந்த சூழ்நிலையிலும் தேசிய பாதுகாப்பு, தேசிய சுயமரியாதை மற்றும் தேசத்தின் உயர்வு தொடர்பான பிரச்சினைகளில் சமரசம் செய்யாது என்பதை உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: