ஹோம் /நியூஸ் /இந்தியா /

உலகின் 3ஆவது பெரிய மெட்ரோ சேவையாக இந்தியா முன்னேறும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்

உலகின் 3ஆவது பெரிய மெட்ரோ சேவையாக இந்தியா முன்னேறும் - மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தகவல்

இந்தியாவில் மெட்ரோ திட்டங்கள்

இந்தியாவில் மெட்ரோ திட்டங்கள்

விரைவில் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி மெட்ரோ துறையில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  நாட்டின் மெட்ரோ சேவைகள் மேம்பாடு குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பல்வேறு முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற 15ஆவது இந்திய நகர்ப்புற போக்குவரத்து கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் ஹர்தீப் பூரி பங்கேற்றார். மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகமும், கேரள அரசும் இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பங்கேற்றார்.

  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பிற நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளிலிருந்து நாம் பலவற்றை கற்றுக்கொண்டு இந்தியா நடைமுறைப்படுத்துகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள். அதற்கேற்ப செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். தற்போது நாம் மெட்ரோ ரயில் திட்டங்களில் மேற்கொள்ளும் சிறந்த நடைமுறைகள் பிறரிடமிருந்து கற்றுக்கொண்டவை தான்.

  நாட்டில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி 20 நகரங்களில் மொத்தம் 810 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் 27 நகரங்களில் 980 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ மற்றும் ஆர்.ஆர்.டி.எஸ். வழித்தடங்கள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

  இதையும் படிங்க: பணம் திருடு போனதாக போலி புகார் அளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரி.. சக போலீசாரை கண்காணிக்க பலே திட்டம்!

  மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் உலகளவில் இந்தியா, தற்போது 5வது இடத்தில் உள்ளது. விரைவில் ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி இத்துறையில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும். திறம்பட்ட மற்றும் பசுமைப் போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதில் நகர்ப்புற போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசினார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Metro Rail, Urban Train