ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று 1ம் தேதி முதல் நாடுமுழுவதும் தடை விதிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிப் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவை ஜூலை 1ம்தேதி முதல் தண்டனைக்குரிய குற்றமாகும். தடை செய்யப்பட்ட பொருள்களில் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க தேசிய மற்றும் மாநில எல்லைகளில் சோதனைசாவடிகளை அமைத்து தடை செய்யப்பட்ட பொருள்கள் மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க : வரிகள் தொடங்கி அபராதம் வரை.. ஜூலை 1 முதல் 6 முக்கிய மாற்றங்கள்! - கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க
எந்தெந்த பிளாஸ்டிக் பொருள்களுக்கு இன்று முதல் தடை:
* பலூன் ஸ்டிக்ஸ்
* சிகரெட் பேக்ஸ்
* பிளேட்கள், கப்கள், கிளாஸ்கள், ஃபோர்க்ஸ் , ஸ்பூன்கள், கத்திகள், ட்ரேக்கள் உள்ளிட்ட கட்லரி பொருட்கள்
* பிளாஸ்டிக் ஸ்டிக்ஸ் கொண்ட இயர்பட்ஸ்
* ஸ்வீட் பாக்ஸ்களில் சுற்றப்படும் பிளாஸ்டிக் வ்ரேப்பர்
* கேன்டி மற்றும் ஐஸ்கிரீம் ஸ்டிக்ஸ்
* இன்விடேஷன் கார்ட்ஸ்
* அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன்
* 100 மைக்ரானுக்கு கீழான PVC பேனர்ஸ்
* ஸ்ட்ராக்கள்
* ஸ்டிர்ரர் (கிளறிகள்)உள்ளிட்டவைக்கு தடை வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
100 மைக்ரோனுக்கு குறைவான பிவிசி அல்லது பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Environment, India, Plastic Ban, Plastic pollution, Plastics