Home /News /national /

பாதுகாப்பு துறை சார்ந்த 351 உபகரணங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை... உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை

பாதுகாப்பு துறை சார்ந்த 351 உபகரணங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை... உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை

பொருட்களை இடமாற்றம் செய்யப் பயன்படும் சிறிய ரக விமானங்கள், இலகு ரக விமானங்கள், சிறிய ரக நீர் மூழ்கி கப்பல்கள், அதில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், ரேடார்கள், டேங்க் எஞ்சின்கள் உள்ளிட்டவை இந்த பொருட்களில் அடங்கும்.

    பாதுகாப்பு துறை சார்ந்த 351 உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த பொருட்கள் அனைத்தையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் இந்த 351 பொருட்களும் முழுமையாக இறக்குமதி செய்யப்படுவதில் இருந்து தடைசெய்யப்பட்டு விடும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 16 மாதங்களில் 3வது முறையாக மத்திய அரசு இதுபோன்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 2,500 வகையான பாதுகாப்பு உபகரணங்களை மத்திய அரசு உள்நாட்டிலேயே தயாரித்து வருவதாக கூறியுள்ளது.

    இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நிய செலாவணியை மிச்சப்படுத்த முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொரட்களில் பெரும்பாலானவை நீர் மூழ்கி கப்பல் தயாரிப்பின்போது பயன்படுத்தக் கூடியவை. இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் 351 பொருட்களும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக உள்நாட்டிலேயே தயாரித்து விட முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    லேசர் எச்சரிக்கை உணர் கருவி, அதிக அழுத்தத்தை அளவிடும் வால்வு, அதிக அழுத்தத்தை தாங்கும் வால்வு, துளை கண்டறியும் அமைப்பு, பல்வேறு வகையான கேபிள்கள், சாக்கெட்ஸ், மின் அழுத்த கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை இந்த 351 பொருட்களில் அடங்கும்.

    முன்னதாக மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில் 101 ராணுவ ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் தொடர்பான பொருட்களை, இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை 2024ம் ஆண்டுக்குள் முழுமையாக நடைமுறைக்கு வந்து விடும்.

    Also read:  15 பியூன், ஸ்வீப்பர் பணிகளுக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்

    பொருட்களை இடமாற்றம் செய்யப் பயன்படும் சிறிய ரக விமானங்கள், இலகு ரக விமானங்கள், சிறிய ரக நீர் மூழ்கி கப்பல்கள், அதில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், ரேடார்கள், டேங்க் எஞ்சின்கள் உள்ளிட்டவை இந்த பொருட்களில் அடங்கும்.

    கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களையும், உபகரணங்ளையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தின்போது, பாதுகாப்பு துறையில் அன்னிற நேரடி முதலீட்டை 49-ல் இருந்து 74 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது.

    Also Read : ஆந்திராவில் பாஜக ஆட்சி அமைத்தால் மதுபானம் ரூ.50-க்கு விற்கப்படும் - பாஜக மாநில தலைவர் பேச்சால் சர்ச்சை!

    சர்வதேச அளவில் பாதுகாப்பு துறை சார்ந்த பொருட்களை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இதற்காக ஆகும் செலவை குறைக்க வேண்டும் மற்றும் உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்யும் திறனை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    Also Read : Omicron| டெல்டாவையும் மிஞ்சி விட்டது ஓமைக்ரான், பாதிப்பு கடுமையாக இருக்கும்- டாக்டர் ஃபாசி எச்சரிக்கை
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Indian army

    அடுத்த செய்தி