Home /News /national /

விமான சேவை நிறுத்தப்படும் முன் இந்தியாவுக்கு வந்துடுங்க - ஆப்கனில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

விமான சேவை நிறுத்தப்படும் முன் இந்தியாவுக்கு வந்துடுங்க - ஆப்கனில் வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வரும் பத்ரிகையாளர்கள் நாடு திரும்ப வேண்டும் எனவும் அவர்களின் இருப்பிடம், செல்லும் இடம் குறித்த தகவல்களை இந்திய தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கனில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிவருவதால் அதை சாதகமாக எடுத்துக்கொண்ட தலிபான்கள், ஆப்கன் அரசுப் படைகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். பல மாகாணங்களில் சண்டை கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள், ஆளுநர் மாளிகைகள், அரசு அதிகாரிகளின் வீடுகள் போன்றவை தாக்குதலுக்கு இரையாகி வருகின்றன. இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் வசிக்கும் தங்கள் நாட்டினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என பல நாடுகளும் தங்களின் குடிமக்களுக்கு எச்சரித்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவும் தனது குடிமக்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறது.

Also Read:  தலிபான்களை ஒடுக்க இந்தியாவின் உதவியை நாடிய ஆப்கானிஸ்தான் அரசு!

பயணிகள் விமான சேவை நிறுத்தப்படும் முன்னர் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் தங்களின் நிறுவனங்களிடம் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு தங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்துமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

மேலும், ஆப்கானிஸ்தானில் பணிபுரிந்து வரும் பத்ரிகையாளர்கள் நாடு திரும்ப வேண்டும் எனவும் அவர்களின் இருப்பிடம், செல்லும் இடம் குறித்த தகவல்களை இந்திய தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read:   தலிபான்களின் அசுர முன்னேற்றம் – ஒரே வாரத்தில் 8வது ஆப்கன் நகரை கைப்பற்றி மிரட்டல்!

இந்தியாவை சேர்ந்த புலிட்சர் விருது பெற்றவரான பத்ரிகையாளரும் புகைப்பட செய்தியாளருமான டேனிஷ் சித்திகி தலிபான்கள் தாக்குதலில் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவர் யார் என்ற அடையாளத்தை தெரிந்துகொண்ட பின்னரே தலிபான்கள் வேண்டுமென்றே கொலை செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சிறிது நாட்களுக்கு முன்னர் காந்தகாரில் தலிபான்கள் தாக்குதல் நடந்த போது அந்நகரில் இருந்த இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர், இதே போல Mazar-i-Sharif நகரிலும் தலிபான் தாக்குதல் அதிகரித்திருப்பதால் அங்கிருந்தும் இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் சுமார் 1500 இந்தியர்கள் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் Mazar-e-Sharif நகரில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இந்தியர்களுடன் நேற்று மாலை டெல்லி புறப்பட்டிருக்கிறது.
Published by:Arun
First published:

Tags: Afghanistan, Taliban

அடுத்த செய்தி