ஓரேநாளில் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சர்வதேச யோகா தினத்தில் இந்தியா இலக்கு!

கோப்புப் படம்

ஜூன் 21ம் தேதி முதல் நாளொன்றுக்கு 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இலக்கு நிர்ணயித்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் இந்த எண்ணிக்கையை நாளொன்றுக்கு 12 லட்சம் என உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

  • Share this:
சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஒரே நாளில் 50 லட்சம் பேருக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை இந்தியா எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் தொடர் முயற்சி காரணமாக ஜூன் 21ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014ம்  ஆண்டு சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  நாளைய தினம் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பல்வேறு மாநில அரசுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இலக்கு நிர்ணயித்துள்ளதால் நாளைய தினம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 3வது அலை - ஊரடங்கு தளர்வுகளில் கவனம் தேவை: மத்திய அரசு எச்சரிக்கை...

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் 43 லட்சம்  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதே இந்தியாவில் ஒருநாள்  அதிகப்பட்சமாகும்.  ஜூன் 14ம் தேதி 38.2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், நாளை 50 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 21ம் தேதி முதல் நாளொன்றுக்கு 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இலக்கு நிர்ணயித்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் இந்த எண்ணிக்கையை நாளொன்றுக்கு 12 லட்சம் என உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மகளின் கல்விக்காக கொட்டும் மழையில் குடைபிடித்த பாசக்கார தந்தை...

இதேபோல், நாளைய தினம் 10 லட்சம் பேருக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய பிரதேச அரசு  இலக்கு நிர்ணயித்துள்ளது.  நாளைய தினம் 2.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி  செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

பிகாரில் ஆட்சியில் உள தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க முனைப்புக் காட்டி வருகிறது. ஒடிசா போன்ற மாநிலங்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நாளொன்றுக்கு ஒருகோடி தடுப்பூசி செலுத்தவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Published by:Murugesh M
First published: