Home /News /national /

கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வர தடை...!

கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வர தடை...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

மொபைல் போன்களில் வரும் காலர் டியூன்களுக்கு தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    கொரோனா வைரஸை உலகளாவிய தொற்று நோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில், வெளிநாட்டுப் பயணிகளுக்கான விசாவை அடுத்த மாதம் 15-ம் தேதிவரை ரத்துசெய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    சீனாவின் ஊகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இத்தாலியில் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

    இலங்கையில் வெளி நாடுகளிலிருந்து வந்தபின் விசா பெற்றுக் கொள்ளு ம் நடைமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளது. அயர்லாந்து, ஸ்வீடன் நாடுகளில் கொரோனா தொற்று காரணமாக முதல்முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கொரோனா வைரஸை உலகளாவிய தொற்று நோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஸ்விட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம், சீனாவுக்கு வெளியே கடந்த இரண்டு வாரங்களில் நோய்த் தாக்கம் 13 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளா, கர்நாடக மாநிலங்களில் புதிதாக வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதால், இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்தியாவில் நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து உயர்மட்ட அமைச்சர்கள் குழு டெல்லியில் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு வழங்கப்பட்ட விசா அனைத்தும் அடுத்த மாதம் 15-ம் தேதிவரை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், தூதர்கள், ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள், பணிநிமித்தமாக வருவோருக்கான விசாக்கள் மட்டும் செல்லும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டினருக்கான விசாக்கள் தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தேவையில்லாத பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் இருப்போரும் தேவையில்லாத பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    கர்நாடகாவில் கொரோனா அறிகுறிகளுடன் இருந்த முதியவர் உயிரிழந்த நிலையில், நாளை நடைபெறவிருந்த மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தை மத்திய நிதியமைச்சகம் ரத்துசெய்துள்ளது. பொதுமக்கள் செல்லும் பேருந்துகளில் தினந்தோறும் கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    கொரோனா வைரஸ் பரவுவதால், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு வருவதைத் தவிர்க்குமாறு சுற்றுலாப் பயணிகளை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதனிடையே, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மொபைல் போன்களில் வரும் காலர் டியூன்களுக்கு தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    அடுத்த செய்தி