HOME»NEWS»NATIONAL»india successfully test fires nuclear capable shaurya missile riz

அதிநவீன ஷௌரியா ஏவுகணை சோதனை வெற்றி - 800 கி.மீ தூரத்திலுள்ள இலக்கையும் அழிக்கும்

அதிநவீன ஷௌரியா (shaurya) ஏவுகணையை DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

அதிநவீன ஷௌரியா ஏவுகணை சோதனை வெற்றி - 800 கி.மீ தூரத்திலுள்ள இலக்கையும் அழிக்கும்
அதிநவீன ஷௌரியா (shaurya) ஏவுகணையை DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • Share this:

அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஷௌரியா (shaurya) ஏவுகணையை DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒடிஷா கடற்கரையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 800 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளையும் எளிதில் தாக்கி அழிக்கும் சக்திகொண்ட இந்த ஏவுகணை இயக்குவதற்கு இலகுவாகவும், எளிதாகவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏவுகணையானது 10 மீட்டர் நீளமும் 74 செண்டிமீட்டர் அகலமும் 6.2 டன் இடையும் கொண்டது. இதை எங்கே வைத்துள்ளோம் என்பதை எதிரி தரப்பால் கண்டறிய முடியாது என்றும் சேட்லைட் வரைபடத்திலும் இது அகப்படாது என்றும் கூறப்படுகிறது.

Also read: பிரான்ஸிலிருந்து பிரிந்து தனிநாடாக 'நியூ கலிடோனியா' மாறுவது குறித்து வாக்கெடுப்பு





அண்மையில் 400 கிலோமீட்டர் தூர இலக்குகளை அழிக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. இதன் தொடர்ச்சியாக அதை விட இருமடங்கு தொலைவில் உள்ள இலக்கை அழிக்கும் ஷௌரியா ஏவுகணையும் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
Published by:Rizwan
First published: