எதிரிகளின் போர் விமானங்களை துல்லியமாக தாக்கும் இந்திய ராணுவ ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளன. ஒடிசாவின் சந்திபூர் ஏவுகணை தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ., இஸ்ரேல் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏவுகணைகளை வடிவமைத்துள்ளது.
அதிவேகமாக செல்லும் எதிரிகளின் போர் விமானங்களை இந்த ஏவுகணைகள் துல்லியமாக வீழ்த்தும் திறன் கொண்டவை.
ஏவுகணை சோதனை எதிர்பார்த்த வெற்றியை கொடுத்துள்ளதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது. நடுத்தர தொலைவு சென்று தாக்கும் இந்த ரக ஏவுகணைகளை, ஏவுகணை தளம் அல்லது நடமாடும் ஏவுகணை தளத்தின் மூலம் செலுத்த முடியும்.
இதையும் படிங்க - வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு - மத்திய அமைச்சர் திட்டம்
இந்திய நேரப்படி நேற்று காலை 10.30 மணியளவில் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க - 28, 29 தேதிகளில் நாடு தழுவிய ஸ்டிரைக் அறிவிப்பு.. ஏன் நடக்கிறது? என்ன பணிகள் பாதிக்கும்?
ஏவுகணையை வெற்றிகரமாக வடிவமைத்து சோதனை செய்ததற்காக டி.ஆர்.டி.ஓ., இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏவுகணை சோதனை நடத்துவதற்கு முன்பு பாலசோர் அருகில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பொதுமக்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.