இந்தியா-சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா நேற்று அக்னி 5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த அக்னி -5 ஏவுகணையை இரவில் ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் பாதுகாப்பு அமைச்சகம் சோதித்து பார்த்துள்ளது.
5,500 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள இலக்கை நிலப்பரப்பில் இருந்து துல்லியமாக தாக்கக்கூடிய இந்த அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் எல்லை பகுதியில் இந்தியா சீனா பாதுகாப்பு படையினர் இடையே சில நாள்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது.சீன வீரர்கள் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த நிலையில் சீனாவுக்கு இந்திய வீரர்கள் உரிய பதிலடி தந்துள்ளனர். இந்த பின்னணியில் தான் இந்த அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று சோதனை செய்யப்பட்ட அக்னி-5 ஏவுகணை சீன தலைநகர் பெய்ஜிங் வரை உள்ள இலக்கை குறி வைத்து தாக்கம் திறன் கொண்டது.
அக்னி 1 முதல் 4 ஏவுகணைகள் 3,500 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை மட்டுமே தாக்கம் திறன் கொண்டது. இந்நிலையில், அக்னி-5 5,000 கிமீ தூரத்தை தாண்டி இருக்கும் இலக்கை தாக்கும். இதன் திறனை மேலும் மேம்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து திட்டமிட்டுள்ளது.
நேற்றைய சோதனையானது சீனாவிற்கு இந்தியா மறைமுகமாக விடுத்துள்ள எச்சரிக்கை என பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 50 ஆயிரம் கிலோ எடைகொண்ட இந்த ஏவுகணை 1.7 மீட்டர் உயரத்தையும் 2 மீட்டர் விட்டத்தையும் கொண்டுள்ளது. ஒலியை விட வேகமாக செல்லும் ஆற்றல் படைத்த இந்த ஏவுகணை நொடிக்கு 8.16 கிலோமீட்டர் வேகத்திலும் ஒரு மணி நேரத்துக்கு 29,401 கிலோமீட்டர் வேகத்திலும் பாயும் திறன் கொண்டது. இந்தியா ஏற்கனவே - முறை இந்த ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்
அக்னி-V இன் முதல் வெற்றிகரமான சோதனை ஏப்ரல் 19, 2012 அன்று நடத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து செப்டம்பர் 15, 2013, ஜனவரி 31, 2015, டிசம்பர் 26, 2016, ஜனவரி 18, 2018, ஜூன் 3, 2018 மற்றும் டிசம்பர் 10, 2018, அக்டோபர் 28, 2021 ஆகிய தேதிகளில் ஏவுகனை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Defense Ministry, India vs China