இந்திய துணை குடியரசுத்தலைவரின் அருணாச்சல பிரதேச மாநில வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சீனாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
லடாக் பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சீன - இந்திய ராணுவ வீரர்களுக்கிடையிலான மோதலை அடுத்து, ஒன்றரை ஆண்டுகளாகவே இருதரப்புக்கும் இடையே எல்லை விவகாரத்தால் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மட்டுமல்லாது உத்தரகண்ட், அருணாச்சல் பிரதேச மாநிலங்களின் எல்லைகளிலும் இந்திய ராணுவத்துடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி உத்தரகண்டின் பரோகதி செக்டார் என்ற எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்திய பகுதியில் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் சில மணி நேரங்கள் அங்கு தங்கியிருந்து விட்டு மீண்டும் சீன பகுதிக்கு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்கள் நுழைய முயன்றபோது இந்திய வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். கடந்த ஆண்டு லடாக்கில் நடைபெற்றதைப் போலவே அருணாச்சல பிரதேசத்திலும் நடந்தது. இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சீன ராணுவத்தினர் பின்வாங்கிச் சென்றனர்.
Also Read:
ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?
சீன ராணுவத்தினர் உண்மையான எல்லை கோட்டு பகுதியில் பதற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், துணை குடியரசுத் தலைவரான வெங்கய்ய நாயுடு கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் அருணாச்சல் பிரதேச மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இடாநகரில் உள்ள சட்டமன்றத்தில் அவர் உரையாற்றினார்.
வெங்கய்ய நாயுடுவின் அருணாச்சல் பிரதேச வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன ராணுவ செய்தித்தொடர்பாளர் சாவோ லிஜியன் கூறுகையில், அருணாச்சல் பிரதேசத்தை சீனா அங்கீகரிக்கவில்லை. இந்திய தலைவர்கள் அங்கு செல்வது பொருத்தமானதாக இல்லை. இந்த வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.
Also Read:
ஜாதகம் அடிப்படையில் மாணவர் சேர்க்கை.. அரியவகை பள்ளி.. வித்தியாசமான கற்பித்தல் முறை!
சீன செய்தித்தொடர்பாளரின் கருத்து வெளியான நில நேரத்தில் இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளரான அரிந்தம் பாக்சி, சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் கூறுகையில் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். சீன தரப்பின் கருத்துக்கள் ஏற்புடையது அல்ல. இந்திய எல்லையில் சீனா பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து, இருக்கும் நிலையில் மாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.