வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் குறைவு: மத்திய அரசு

வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் குறைவு: மத்திய அரசு
மாதிரிப் படம்
  • Share this:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது நிலையில்தான் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் தற்போது வரை 1071 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. 29 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால், ‘இந்தியாவில் 100 பேரிலிருந்து 1,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவுவதற்கு 12 நாள்கள் தேவைப்பட்டுள்ளது. பிற வளர்ந்த மக்கள் தொகை குறைவாகக் கொண்ட நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பரவும் வேகம் குறைவானது. மத்திய மற்றும் மாநில அரசுகள் சமூக இடைவெளியை தீவிரமாக வலியுறுத்தியதை மக்கள் பின்பற்றுவதால் கொரோனா பரவும் வேகம் குறைவாக உள்ளது.

ஒருவருடைய அலட்சியம் இந்த கொரோனா மிக வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது நிலையில்தான் உள்ளது. ஒருவேளை நாம் மூன்றாவது நிலையான சமூகப் பரவல் நிலையில் இருந்தால் அதனை ஊடகங்கள் வழியாக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களுக்கு அதிக விழிப்புணர்வு எடுத்துவேண்டியது அவசியமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.


Also see:
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading