INDIA STANDS WITH UTTARKHAND SAID PRIME MINISTER NARENDRA MODI SRS
உத்தரகண்ட் பாதிப்பு: `இந்தியா உங்களுடன் துணை நிற்கிறது’ - பிரதமர் மோடி ட்வீட்
உத்தரகாண்டில் திடீர் வெள்ளம்
பனிப்பாறைகள் ஆற்றில் விழுந்ததால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 100 முதல் 150 பேர் பலியாகி இருக்கக்கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடுமையாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் சாமோலி மாவட்டத்தில் உள்ள Alaknanda மற்றும் Dhauliganga ஆறுகளை ஒட்டிய மலைத்தொடரில் இருந்த மிகப்பெரிய பனிப்பாறை வெடித்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. பனிப்பாறைகள் ஆற்றில் விழுந்ததால் ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 100 முதல் 150 பேர் பலியாகி இருக்கக்கூடும் என அம்மாநில தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ’உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள துரதிஷ்டமான சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். இந்தியா உத்தரகண்ட் மாநிலத்துடன் துணை நிற்கிறது. அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பிற்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பிரார்த்தனை செய்கிறது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகளிடம் தகவல்களைக் கேட்டு வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு தொடர்பாக, ’அசாம் மாநிலத்தில் இருக்கும் பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு நிலைமையை ஆய்வு செய்தார். அம்மாநிலத்தின் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் அவர் பேசியுள்ளார். வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு அனைத்து வகையான உதவிகளையும் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.