Home /News /national /

ஃப்ரான்ஸ் நாட்டுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் - முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அறிக்கை

ஃப்ரான்ஸ் நாட்டுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் - முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் அறிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஃப்ரான்ஸ் நாட்டுக்கு இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஃப்ரான்ஸ் நாட்டில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் ஃப்ரான்ஸ் நாட்டில் சமீபத்தில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் பன்மைவாதம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கொண்ட அனைத்து ஜனநாயக நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃப்ரான்ஸ் நாடு அதனுடைய வரலாற்றுப் பூர்வமாகவே கருத்துச் சுதந்திரத்துடன் ஆழந்த தொடர்பைக் கொண்டது. ஃப்ரான்ஸின் இஸ்லாமிய மக்கள், ஃப்ரான்ஸ் அரசு மற்றும் மதம், கருத்துச் சுதந்திரத்திலிருந்து வேறு ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்தியா ஏற்கெனவே ப்ரான்ஸ் அதிபருக்கு தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு ஆதரவைக் கொடுத்துள்ளது.

    சமீபத்திய ஆண்டுகளில் ஃப்ரான்ஸ் ஒரு நாடாக இந்தியாவுடன் நெருக்கமாகியுள்ளது. அரசு ஊக்குவிக்கும் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் நாடாக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா இருந்துவருகிறது. தீவிரவாதம் இந்தியாவிலும் உணர்ச்சி மிகுந்த விஷயமாக உள்ளது. சர்வதேச தீவிரவாதம் உலக நாடுகளின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பன்முகக் கொள்கைக்கும் ஆபத்தாக உள்ளது என்று பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் ஒருமித்த குரலில் பல்வேறு முறை, எந்த காரணத்துக்காகவும் தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளனர்.

    இந்த கருத்தின் அடிப்படையில் இந்தியாவில் ஃப்ரான்ஸுக்கும், அந்நாட்டின் அதிபர் மேக்ரானுக்கும் எதிராக நடைபெறும் போராட்டங்கள் சர்வேத நாடுகளின் ஒருமித்த கருத்துக்கும், இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கும், ஃப்ரான்ஸ், இந்தியா ஆகிய இரு நாடுகளின் நல்ல உறவுக்கும் மாறாக உள்ளது.

    கடினமான நேரங்களில் இந்தியா ஃப்ரான்ஸுக்கு உறுதுணையாக உள்ளது. இந்த விஷயத்தில் ஃப்ரான்ஸுக்கும் ஆதரவாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் 22 முன்னாள் வெளியுறத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: India and France

    அடுத்த செய்தி