Home /News /national /

இந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு: 1,038 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் 2 லட்சத்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு: 1,038 பேர் உயிரிழப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

    சச்சின் டெண்டுல்கர், அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியாவின் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 93,528 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    நேற்று மட்டும் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், இந்தியா முழுவதும் 1,40,74,564 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 14,71,877 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்துவருகின்றனர். இதுவரையில், 1,73,123 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் நாடு முழுவதும் 11,44,93,238 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus

    அடுத்த செய்தி