இந்தியாவில் 102 நாள்களுக்குப் பிறகு 40,000-க்கும் குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

மாதிரிப் படம்

இந்தியாவில் 102 நாள்களுக்குப் பிறகு நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 40,000-த்தைவிட குறைந்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு மார்ச் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவத் தொடங்கியது. மே மாதத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சம் தொட்டது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. அதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கொரோனா பரவல் மெல்லமாக குறையத் தொடங்கியது. இந்தியாவில் 102 தினங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 40,000-த்துக்கும் குறைந்துள்ளது.

  இந்தியாவின் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 17,68,008 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 37,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 3,03,16,897 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 56,994 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 2,93,66,601 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா பாதிப்பு குணமடைபவர்களின் விகிதம் 96.87 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 907 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் மூலம் மொத்த உயிரிழப்பு 3,97,637 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில், 32.85 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 48.01 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: