முகப்பு /செய்தி /இந்தியா / இனி மொபைல் மூலம் சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்பலாம்: புதிய சேவையை தொடங்கிய பிரதமர் மோடி

இனி மொபைல் மூலம் சிங்கப்பூரில் உள்ளவர்களுக்கு பணம் அனுப்பலாம்: புதிய சேவையை தொடங்கிய பிரதமர் மோடி

 பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கடந்த சில ஆண்டுகளாக புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நவீனமயமாக்கலுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா-சிங்கப்பூர் இடையே யூபிஐ–பேநவ் (UPI-PayNow) இணைப்பின் மூலம் நிகழ்நேர பணப்பரிமாற்றம் செய்யும்  சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாக பணப்பரிவர்த்தனை செய்ய முடிந்ததாக, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் UPI என்ற ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற முறை பயன்பாட்டில் உள்ளது. கோடிக்கணக்கான பணப்பரிவர்த்தனை ஆண்டுதோறும் இதில் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதேபோல் சிங்கப்பூரிலும் பே நவ் என்ற பணப்பரிமாற்ற முறை உள்ளது. இந்த இரண்டு பணப்பரிமாற்ற முறையையும் இணைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங்கும் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இருவர் முன்னிலையில் சிங்கப்பூர் நிதித்துறை அதிகாரி ரவி மேனன், தனது DBS வங்கிக்கணக்கில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸின் ஸ்டேட் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்தார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, கடந்த சில ஆண்டுகளாக புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நவீனமயமாக்கலுக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக கூறினார்.

First published:

Tags: Modi