ஹோம் /நியூஸ் /இந்தியா /

தாலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ஃபரூக் அப்துல்லா

தாலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ஃபரூக் அப்துல்லா

Farook abdullah

Farook abdullah

தற்போதைய தாலிபான் ஆட்சியாளர்களான தாலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தாலிபான்களுடன் இந்தியா உறவு வைத்துக்கொள்வதில் தவறேதும் இல்லை, தாலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தாலிபான்களுடனான இந்தியாவின் உறவு குறித்து பேசியிருக்கிறார்.

ஃபரூக் அப்துல்லா கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சியில் உள்ளனர். கடந்த ஆட்சியின் போது ஆப்கானிஸ்தானில் பல நலத்திட்டங்களுக்காக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை இந்தியா செலவிட்டுள்ளது. அந்த நாட்டுக்காக அவ்வளவு தொகையை நாம் செலவிட்டிருக்கும் போது அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வதில் என்ன தவறு இருக்கிறது? தற்போதைய தாலிபான் ஆட்சியாளர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” இவ்வாறு காஷ்மீர் முன்னாள் முதல்வரான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

முன்னதாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் தாலிபான்கள் குறித்து பேசிய ஃபரூக் அப்துல்லா, “இஸ்லாமிய கொள்கைகளை மதித்து ஆப்கானியர்கள் தங்கள் நாட்டில் அமைதியாக ஆட்சி நடத்துவார்கள் மற்றும் அடிப்படை மனித உரிமை மதிப்புகளை மதிக்கிறார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் பிற நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

Also Read:  பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு – முழு விவரம்!

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகளிடம் இருந்து பெறும் தரவுகளின் அடிப்படையில் மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தை வடிவமைக்க வேண்டும் எனவும் ஃபரூக் அப்துல்லா கூறினார்.

பிரதமரின் அமெரிக்க பயணம்:

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து பேசிய ஃபரூக் அப்துல்லா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேசுவார் என கருதுகிறேன். தீவிரவாதம் உலக நாடுகளுக்கு பிரச்னை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தீவிரவாதத்தை யார் தொடங்கியது? யார் ஈராக் மீது தாக்குதல் நடத்தினார்கள்? ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையை மீறி யார் லிப்யா மீது குண்டு வீசினார்கள்? பிற நாடுகளை பலவீனப்படுத்தியது எந்த தீவிரவாத தேசம்?

Also Read:   ‘தவறு செய்தால் கை வெட்டப்படும்’.. தாலிபான்களின் கொடூர தண்டனைகள் விரைவில் அமல்!

பலம்வாய்ந்த அனைத்து நாடுகளும், எந்த தேசமும் பலம் குறைந்த தேசமாக இருக்க கூடாது என்பதனை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு ஃபரூக் அப்துல்லா கூறினார்.

Published by:Arun
First published:

Tags: Afghanistan, Taliban