Home /News /national /

இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்கவேண்டும்! - நீதிபதி சர்ச்சைக் கருத்து

இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்கவேண்டும்! - நீதிபதி சர்ச்சைக் கருத்து

மேகலயா உயர் நீதிமன்ற நீதிபதி

மேகலயா உயர் நீதிமன்ற நீதிபதி

சுதந்திரத்துக்குப் பிறகு நாடு பிரிவினையின்போது, லட்சக்கணக்கான இந்துக்களும், சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். அவர்களுடைய தாய் நிலங்களிலிலிருந்து அவர்களுடைய சொத்துகளை விட்டுவிட்டு இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர்.

  • News18
  • Last Updated :

    • இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் நீதிமன்ற உத்தரவில் மேகலாயா உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.


    பாகிஸ்தான், வங்க தேசம் ஆகிய பகுதிகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் வந்தவர்களுக்கு மறுகுடியமர்வு வழங்கப்படுவது தொடர்பாகவும், குடியுரிமை வழங்கப்படுவது தொடர்பாக தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று மேகாலயா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஆர்.சென்னின் தீர்ப்பு குறிப்பு சற்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவருடைய தீர்ப்பில், ‘பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிலிருந்து அகதிகளாக வரும் இந்து, ஜெயின், புத்திஸ்ட், பார்சி, சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்களிடம் எந்தக் கேள்வியும் எழுப்பாமல் ஆவணங்கள் ஏதும் கேட்காமல் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி அமைதியான முறையில் இந்தியாவில் வாழ்வதற்கு வழிவகை செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

    அவர்கள், எந்த நேரத்தில் இந்தியாவுக்குள் வந்தாலும், அவர்களை மறுகுடியமர்வு செய்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும். பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான் என்ற பிரிவினை இல்லாமல் இந்தியா பெரும் நாடாக இருந்தது அனைவருக்கும் தெரியும். ஒரே நாடாக இந்து பேரரசாக இருந்தது. பின்னாட்களில் முகலாயர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினர். பல பகுதிகளில் மத மாற்றம் நடைபெற்றது. பின்னர், கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் வந்த ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதையும் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.

    அப்போது, கட்டாயப்படுத்தப்பட்ட மதமாற்றம் நடைபெற்றது. சுதந்திரத்துக்குப் பிறகு நாடு பிரிவினையின்போது, லட்சக்கணக்கான இந்துக்களும், சீக்கியர்களும் கொல்லப்பட்டனர். அவர்களுடைய தாய் நிலங்களிலிலிருந்து அவர்களுடைய சொத்துகளை விட்டுவிட்டு இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர். நாடு பிரிவினையின்போது, பாகிஸ்தான் தன்னை இஸ்லாம் நாடாக அறிவித்துக் கொண்டது. அதேபோல, இந்தியாவையும் இந்து நாடாக அறிவித்திருக்கவேண்டும்.

    ஆனால், மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. நான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் கிடையாது. இந்திய சட்டத்தைப் பின்பற்றி இங்கே பல தலைமுறைகளாக வாழும் இஸ்லாமியர்களும் இங்கே அமைதியாக வாழ வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Hindu Country, Meghalaya high court

    அடுத்த செய்தி