இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் அவசர ஆலோசானையில் ஈடுபட்டு வருகிறனர்.

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் அவசர ஆலோசானையில் ஈடுபட்டு வருகிறனர்.
  • News18
  • Last Updated: February 27, 2019, 4:30 PM IST
  • Share this:
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லைக்குள் நுழைந்த F16 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் விமானி பாராசூட் மூலம் குதித்தாதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

தொடர்ந்து இந்திய எல்லையில் இப்படித் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகரி கர்னல் தியாகராஜன் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு அளித்த பேட்டியில் “நாம் நடத்திய தாக்குதலுக்கு அவர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். இதற்காக இந்தியர்கள் பதட்டப்படத் தேவையில்லை. பாகிஸ்தான் விமானத்தை தற்போது நாம் சுட்டு வீழ்த்தியுள்ளோம். இது எதிர்பார்த்த ஒன்று தான்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையின் நிலை சரியில்லாததால் போருக்கு வந்தால் அவர்களால் 1 வாரம் கூட சமாளிக்க முடியாது. ” என்று கூறினார்.


பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை அடுத்து தர்சமசலா, டேராடூன் விமான நிலையங்களிலிருந்து பயணிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் அதிகாரிகள் அவசர ஆலோசானையில் ஈடுபட்டு வருகிறனர்.

Live Updates: இந்தியா -  பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் - உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்து கொள்ள க்ளிக் செய்கமேலும் பார்க்க:
First published: February 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading