ஹோம் /நியூஸ் /இந்தியா /

சமூக ஊடகங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும்- அரசு உத்தரவு!

சமூக ஊடகங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும்- அரசு உத்தரவு!

சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்கள்

நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் பயனர்களிடமிருந்து புகார்களை பெற்றுக் கொள்ள வேண்டும். தகவல் அகற்றுதல் கோரிக்கையை 15 நாட்கள் அல்லது 72 மணி நேரத்திற்குள் அவற்றை தீர்க்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • chennai |

  பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பயனாளர்களின் புகார்கள் மீதான நடவடிக்கையை உறுதி செய்ய மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

  இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தனிப்பட்ட நபர்கள் முதல் பல்வேறு தரப்பினரைப் பற்றி பதிவாகும் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்க பயனர்கள் முறையிடும் வழக்கம் இருந்தாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்ற புகார் நீண்ட நாட்களாக உள்ளது.

  இதை கருத்தில் கொண்டு சமூக ஊடக நிறுவனங்களுக்குப் பொருந்தும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகளில் திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பாணையை இந்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

  கிரிக்கெட்டில் தோல்வி... பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாவே அதிபர்

  அதன்படி டிவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், இந்திய சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அக்டோபர் 28 முதல் நடைமுறைக்கு வந்துள்ள திருத்தப்பட்ட விதிகளின் கீழ், சமூக ஊடக தளங்களின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் முடிவுகள் குறித்த பயனர்களின் புகார்களைக் கேட்க அரசு குழு ஒன்று அமைக்கப்படும்.

  நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் பயனர்களிடமிருந்து புகார்களை பெற்றுக் கொள்ள வேண்டும். தகவல் அகற்றுதல் கோரிக்கையை 15 நாட்கள் அல்லது 72 மணி நேரத்திற்குள் அவற்றை தீர்க்க வேண்டும்.

  மொத்தமாக ரூ.2200 கோடி ஃபைன்.. அதிகார துஷ்பிரயோகம்.. அடிமேல் அடிவாங்கும் கூகுள்!

  மேலும், பயனாளர்களின் புகார்கள் மீது சமூக ஊடகங்கள் எடுத்த நடவடிக்கை திருப்தி தராவிடில் அவர்கள் மேல்முறையீடு செய்யும் வகையில் மேல்முறையீட்டுக் குழுக்களை அமைக்கும் விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

  மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குறைகள் மேல்முறையீட்டுக் குழுக்கள் மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Central government, Social media