ஹோம் /நியூஸ் /இந்தியா /

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைத்த இந்தியா!

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைத்த இந்தியா!

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

கோவின் இணையதளத்தின் புள்ளிவிவரப்படி, வெள்ளிக்கிழமை 3 மணியளவில் 1,02,90,374 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாட்டில் முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி வெறும் 19 நாள்களில், புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் புதிதாக 2,51,209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,06,22,709 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,47,443 பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து மொத்தமாக 3,80,24,771 குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 21,05,611 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 627 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா மொத்த உயிரிழப்புகள் 4,92,327 இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் 164 கோடியாகும். இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: மும்பை சேரி டூ மைக்ரோசாப்ட்... பெண்ணின் தன்னம்பிக்கை பயணம்.. வைரலாகும் வாழ்க்கை கதை!

இதேநேரத்தில், ஒமைக்ரான் பரவலும் நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு ஜனவரி 10, 2022 அன்று முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது.

இத்திட்டம் தொடங்கப்பட்டு வெறும் 19 நாள்களில், இதுவரை ஒரு கோடிப் பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவின் இணையதளத்தின் புள்ளிவிவரப்படி, வெள்ளிக்கிழமை 3 மணியளவில் 1,02,90,374 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் 30.80 லட்சம் பேர் சுகாதாரத் துறையினர், 32.72 லட்சம் பேர் முன்களப் பணியாளர்கள் என்றும், 39.88 லட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைத்த இந்தியா!

மேலும், 15 - 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு இதுவர 4.43 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 164.44 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Corona Vaccine, Vaccine