மக்கள் தொகையில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் - வருடத்தை கணித்த ஐ.நா

உலகில் 100 பேர் தான் வாழ்கிறார்கள் என எடுத்துக்கொண்டால், ஆசியாவில் தான் அதிகபட்ச மக்கள் தொகை இருக்கும்.

மக்கள் தொகையில் சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளும் - வருடத்தை கணித்த ஐ.நா
கோப்புப்படம்
  • Share this:
இந்தியாவில் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்துவரும் நிலையில், 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. 700.80 கோடியாக உள்ள உலக மக்கள் தொகை, இன்னும் 10 ஆண்டுகளில் 800.50 கோடியாக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை கணித்துள்ளது.

இந்தியாவில் 18 சதவீதம், சீனாவில் 19 சதவீதம் மக்கள் தொகை உள்ள நிலையில், 2027-ம் ஆண்டில் இந்தியா சீனாவை பின்னுக்குத்தள்ளி மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஏற்படும் பாதிப்புகளை 100 பேரைக் கொண்டு எடுத்துக்காட்டுடன் புரிந்து கொள்ளலாம். உலகில் 100 பேர் தான் வாழ்கிறார்கள் என எடுத்துக்கொண்டால், ஆசியாவில் தான் அதிகபட்ச மக்கள் தொகை இருக்கும்.

அந்த 100 பேரில் முதலில் 25 வயது முதல் 54 வயதுள்ளவர்கள் அதிகமாகவும், அதற்கடுத்து 14 வயது வரை உள்ளவர்கள் அதிகமாகவும், பின்பு 15 முதல் 24 வயதினர் அதிகமாகவும் இருப்பார்கள்.

Also read... ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு - உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதிமதங்களை பொருத்தவரை கிறிஸ்தவர்கள் அதிகம் இருப்பார்கள். சீன மொழி 12 பேர், ஸ்பேனிஷ் 6 பேர், ஆங்கிலம் 5 பேர், இந்தி 4 பேர், அரபிக் 3 பேர் பேசுவார்கள். மீதமுள்ள 70 பேர் மற்ற மொழிகள் பேசுபவர்களாக இருப்பார்கள்.

100 பேரில் 14 பேர் எழுதப், படிக்கத் தெரியாதவர்களாக இருப்பார்கள். உலகில் அந்த 100 பேரில் ஒருவர் மட்டுமே 50 சதவீத பணத்தை கட்டுப்படுத்தக் கூடியவராக இருப்பார்.
படிக்க: இன்று அறிமுகமாக இருக்கும் Google-இன் ”சம்திங் ஸ்பெஷல்” என்ன?


படிக்க: ஆறு ஒன்றில் இரு வண்ணங்களில் நீர் ஓடும் ஆச்சர்யம் - வீடியோ
63 பேர் சராசரி எடையிலும், 21 பேர் அளவுக்கு அதிகமான எடையிலும் இருப்பார்கள். 87 பேரைத் தவிர மீதி 13 பேருக்கு தூய்மையான தண்ணீர் கிடைக்காது. 23 பேர் எந்த வாழ்விடமும் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

56 பேருக்கு இணைய வசதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். 75 பேரைத் தவிர மீதி 25 பேரிடம் கைப்பேசி இருக்காது. 93 பேருக்கு உயர்கல்வி கிடைக்காது. 7 பேர் மட்டுமே கல்லூரிப் படிப்பிற்கு செல்வார்கள். இந்திய மக்கள் தொகை 138 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading