ராஜஸ்தானில் தற்போது 351 அடி உயரத்தில் சிவன் சிலை உருவாகி வருகிறது. உலகிலேயே மிகவும் உயரமான சிவன் சிலை என்ற பெருமையை இச்சிலை அடைகிறது.
குஜராத்தில் சமீபத்தில்தான் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் சிலை திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை ஒன்று உருவாகி வருகிறது.
ராஜஸ்தானில் உள்ள நதட்வாரா என்ற பகுதியில் இச்சிலை தற்போது உருவாகி வருகிறது. 351 அடி உயரத்தில் 2,500 டன் ஸ்டீல் கொண்டு இச்சிலை தயாராகி வருகிறது. இதில் சிவன் உருவத்தின் தோள் பகுதி வரையிலான உயரம் மட்டும் 260 அடி.
20 அடி உயரத்தில் 3 பார்வை மாடங்கள், லிஃப்ட் என பல கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி உருவான இத்திட்டம் வருகிற ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.
உலக அளவில் குஜராத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலை, சீனாவின் புத்தர் சிலை, மியான்மரின் லேகுன் செக்யா சிலையைத் தொடர்ந்து நான்காவது பெரிய சிலை ஆக ராஜஸ்தான் சிவன் சிலை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் பார்க்க: கணக்கில்லாமல் அனுமதி வழங்கும் நேபாளம்: எவரெஸ்டில் அதிகரிக்கும் மரணங்கள்! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.