• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இலங்கைக்கு 150 டன் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கிய இந்தியா

இலங்கைக்கு 150 டன் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கிய இந்தியா

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் 150 டன் மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.

  • Share this:
    இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை அதிகரித்து வருவதால், அந்நாட்டின் பொதுமுடக்கம் வருகிற 13ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் பொருளாதார அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா பேரிடரில் இருந்து தங்கள் நாட்டு மக்களை பாதுகாக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

    அதன்பின்னர் அண்டைநாடுகளுடனான நட்புறவை பேணும் வகையில், கடந்த 22-ம் தேதி, 100 டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை கடற்படை கப்பல் மூலம் இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்தது. அதன் தொடர்ச்சியாக மேலும் சுமார் 150 டன் ஆக்சிஜனை தற்போது மத்திய அரசு அனுப்பியுள்ளது. விசாகப்பட்டினம், சென்னை துறைமுகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த ஆக்சிஜன், இலங்கையை வந்துசேர்ந்ததாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவந்த சூழலில், தற்போது இலங்கைக்கு இந்தியா ஆக்சிஜனை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி துறைமுக மேம்பாட்டு பணிகளுக்காக இந்தியாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்தபின்பும், அந்நாட்டுக்கு இந்தியா மருத்துவ ஆக்சிஜன் வழங்கியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: