அச்சுறுத்தும் கொரோனா; 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு பாதிப்பு!

அச்சுறுத்தும் கொரோனா; 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு பாதிப்பு!

கொரோனா

நாட்டில் இதுவரையில்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • Share this:
    நாட்டில் இதுவரையில்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,61,500 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து, நாட்டில் 18,01,316 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,501 பேர் உயிரிழந்தனர். இதனால், ஒட்டுமொத்த உயிரிழப்பு, 1,77,150 ஆக அதிகரித்துள்ளது.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 419 பேர், டெல்லியில் 167 பேர், சத்தீஸ்கரில் 158, உத்தரப்பிரதேசத்தில்120, குஜராத்தில் 97 பேர், கர்நாடகாவில் 80, மத்தியப்பிரதேசத்தில் 66 பேர், பஞ்சாப்பில் 62 பேர், தமிழகத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

    இதுவரை கொரோனாவிலிருந்து 1,28,09,643 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைவோர் சதவீதம் 86.62 ஆகக் குறைந்துள்ளது.

    நாட்டில் இதுவரை 12,26,22,590 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: