Home /News /national /

நாட்டில் ஒரேநாளில் 3.17 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு.. 491 பேர் உயிரிழப்பு!

நாட்டில் ஒரேநாளில் 3.17 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு.. 491 பேர் உயிரிழப்பு!

ஓமைக்ரான் தொற்று

ஓமைக்ரான் தொற்று

New Covid Cases In India | ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்து 9,287 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3.17 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 17 ஆயிரத்து 532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 82 லட்சத்து 18 ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது.

    இதுவரை இல்லாத அளவாக கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 லட்சத்து 24 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.

    Also read:  சீன ராணுவத்தால் அருணாச்சல பிரதேச சிறுவன் கடத்தல்

    ஒட்டுமொத்த பாதிப்பில் 4.18 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைவோர் சதவீதம் படிப்படியாகக் குறைந்து 93.69 சதவீதமாக சரிந்துள்ளது. கொரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த 234 நாட்களில் இல்லாத அளவாக 19 லட்சத்து 24 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 50 லட்சத்து 85 ஆயிரத்து 721 பேர் குணமடைந்துள்ளனர்.

    கொரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 491 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 87 ஆயிரத்து 693 ஆக அதிகரித்துள்ளது.

    ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்து 9,287 ஆக அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.

    Also read:  மகளிடம் பேசிய திருமணமான இளைஞரை கொலை செய்த பக்கத்து வீட்டு குடும்பத்தினர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Omicron

    அடுத்த செய்தி