அமெரிக்காவில் நடத்தப்பட்ட மிஸஸ் உலக அழகி போட்டியை 21 ஆண்டுகளுக்கு பிறகு வென்றுள்ளார் இந்திய பெண் சர்கம் கவுசல்.
திருமணமான பெண்களில் சிறந்த அழகியை தேர்ந்தெடுப் பதற்காக, 'திருமதி உலக அழகி' (மிஸஸ் வேர்ல்டு) போட்டி கடந்த 1984-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான போட்டி அமெரிக்காவில் வெஸ்ட்கேட்லாஸ் வேகாஸ் ரிசார்ட் என்னும் சொகுசுவிடுதியில் நடந்தது. 63 நாடுகளை சேர்ந்த அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இந்தியா சார்பில், சர்கம் கவுசல் என்ற 32 வயது பெண் இந்த உலக அழகி போட்டியில் கலந்து கொண்டார்.
இதையும் படிக்க : பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்த மூதாட்டி!
நேற்று நடந்த இறுதிச்சுற்றில், சர்கம் கவுசல் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு சென்ற ஆண்டுக்கான ‘திருமதி உலக அழகி’ ஷாலின் போர்டு, கிரீடம் சூட்டினார். 2-வது இடத்தை பாலினே சியா நாட்டு பெண்ணும் 3-வது இடத்தை கனடா அழகியும் வென்றனர். கடந்த 2001-ம் ஆண்டு திருமதி உலக அழகி பட்டத்தை இந்திய பெண் அதிதி கவுரிகர் வென்றார். 21 ஆண்டுகள் கழித்து, இந்த பட்டம் மீண்டும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
தான் வெற்றி பெற்றதை சர்கம் கவுசல் சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்தார் சர்கம் கவுசல். அவர் “21 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு கிரீடம் கிடைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார். 2001-ம் ஆண்டில் திருமதி உலக அழகி போட்டியில் வென்ற அதிதி கவுரிகரும் சர்கம் கவுசலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் ஜம்முவை பூர்வீகமாக கொண்ட சர்கம் கவுசல், 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அவருடைய கணவர் அடி கவுசல் இந்திய கடற்படை அதிகாரி என்பது குறிப்புடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Women, Women achievers