Home /News /national /

டெல்லி வன்முறையால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்து விட்டது: ராகுல் காந்தி

டெல்லி வன்முறையால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்து விட்டது: ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

டெல்லி வன்முறையால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நடத்திவரும் அமளியால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் 3-வது நாளாக நேற்று முடங்கியது. இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேரில் பார்வையிட்டனர்.

பிரிஜ்புரா பகுதிக்கு சென்ற தலைவர்கள், வன்முறையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டனர். பள்ளிக்கு சென்ற அவர்கள், வகுப்பறைகள் மற்றும் பேருந்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வன்முறை காரணமாக உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறைந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார்.

இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்ததன் காரணமாகவே, இந்த வன்முறை அரங்கேறியதாக அவர் கூறினார். வெறுப்பு மற்றும் வன்முறையால் யாரும் பயனடைய மாட்டார்கள் என்றும் இது எதிரிகளின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

காவல் துறையின் தடை காரணமாக, குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே காங்கிரஸ் எம்.பி.க்கள் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Delhi, Rahul gandhi

அடுத்த செய்தி