• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்திய நடுத்தர வர்க்கத்தினரிடம் பணம் இருக்கிறது - அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

இந்திய நடுத்தர வர்க்கத்தினரிடம் பணம் இருக்கிறது - அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய மத்தியதர வர்க்கத்தினரிடம் நிறைய பணம் இருக்கிறது, பொருட்களை வாங்கும் திறன் இருக்கிறது என்று பேசியுள்ளார்.

  • Share this:
    இந்திய நடுத்தர வர்க்கத்தினரிடம் பணம் இருக்கிறது - அமெரிக்காவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

    அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய மத்தியதர வர்க்கத்தினரிடம் நிறைய பணம் இருக்கிறது, பொருட்களை வாங்கும் திறன் இருக்கிறது என்று பேசியுள்ளார்.

    அமெரிக்கா சென்றிருக்கும் நிர்மலா சீதாராமன், அங்கு ‘மொசாவர் – ரஹ்மானி’ மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், ஹார்வர்டு பல்கலை பேராசிரியர் லாரன்ஸ் சம்மர்ஸ் உடனான உரையாடலின் போது இவ்வாறு கூறியுள்ளார்: “இந்தியா சிறந்த வாங்கும் திறன் கொண்ட நாடாக இருக்கிறது. மத்திய தரவர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்குவதற்கான பணம் இருக்கிறது. இந்தியாதான் உலகிலேயே அதிக வளர்ச்சி கொண்ட நாடாக இருக்கும்.

    அடுத்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 –- 8.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இது அடுத்த ௧௦ ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

    நடப்பு ஆண்டில் இரட்டை இலக்கத்துக்கு நெருக்கமான வளர்ச்சியை அடையும். நிதியமைச்சகம், வளர்ச்சி குறித்த எந்த கணிப்பையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. என்றாலும், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் மதிப்பீட்டு அமைப்புகள் அனைத்தும், நான் குறிப்பிட்ட இந்த வளர்ச்சி வீதத்தை தான் தெரிவிக்கின்றன.

    சிறந்த வாங்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. நாட்டின் மத்திய தர வர்க்கத்தினரிடம் பொருட்களை வாங்குவதற்கான பணம் இருக்கிறது. பிற இடங்களிலிருந்து வரும் மக்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் ஏற்ற சந்தை இருக்கிறது.” என்கிறார் நிர்மலா சீதாராமன்.

    ஆனால் 2020 ஆம் ஆண்டு வெளியான Pew ரிசர்ச் செண்டரின் ஆய்வின் படி கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தினரை 32 மில்லியனாக சுருக்கி விட்டது, 75 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே சென்று விட்டனர் என்கிறது. இந்த ஆய்வு உலக வங்கி தரவின் அடிப்படையில் வெளியான் ஆய்வாகும்.

    இந்த ஆய்வு அமைப்பு இந்திய மக்கள் தொகையை 5 ஆக வகைப்பிரிக்கின்றனர், ஏழைகள், குறைந்த வருவாய், நடுத்தர வருவாய், மேல் நடுத்தர வருவாய், உயர் வருவாய் பிரிவாக பிரித்ததில், ஏழைகள் நாளொன்றுக்கு 2 டாலர்களுக்கும் குறைவான வருவாயில் வாழ்வாதாரத்தைப் பராமரித்து வருகின்றனர், நடுத்தர வர்க்கம் 10-20 டாலர்கள் வரை தினசரி வருவாய் என்ற ரீதியில் ஈட்டுகின்றன என்கிறது இந்த ஆய்வு. ஒரு டாலர் 80 ரூபா என்று வைத்துக் கொண்டால் கூட 10 டாலர் என்பது ரூ.800, தினசரி ரூ800-1000 என்றால் மாதம் 30,000, இதில் நகரங்களில் வீட்டு வாடகையே ரூ.10,000 முதல் 12,000 வரை போய் விடும் கரண்ட் பில், குழந்தைகள் கல்விச் செலவு, சுகாதாரச் செலவு, தினசரி காய்கனிகள் என்று செலவு இருந்து கொண்டே இருக்கும். இதில் வீடு வாசல் என்று வாங்கினால் மாதத் தவணையும் சென்று விட்டால் கையில் எஞ்சுவது என்ன? என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

    மேலும் இந்தியாவின் மத்தியதர வர்க்கம் என்பது ஒருபடித்தானது அல்ல, தலைநகர் டெல்லியில் இருக்கும் மத்திய தர வர்க்கத்துக்கும் திருச்சியில் இருக்கும், உ.பி.யில் இருக்கும் மத்தியதர வர்க்கத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. நடுத்தர வர்க்கம் என்பது புவியியல் ரீதியாக சிதறுண்டது, அந்தந்த நகரத்துக்கேற்ப நடுத்தர வர்க்கத்தின் நிதிபலம் மாறுபடும் என்கிறது பொருளாதார அறிவியல்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: