நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் பாதை..!

2035ஆம் ஆண்டில் இந்த வழித்தடத்தில் ஒரு மில்லியன் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

news18
Updated: July 31, 2019, 7:04 PM IST
நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் பாதை..!
நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் பாதை
news18
Updated: July 31, 2019, 7:04 PM IST
வெளிநாடுகளில் இதுபோன்ற வித்யாசமான வழித்தடங்களில் ரயில்கள் பயணிப்பதை இந்தியர்கள் இதுவரை அதிசயித்து பார்த்திருப்பார்கள். இனி அதெல்லாம் இந்தியர்களுக்கும் சர்வசாதாரணம்தான்.

கொல்கத்தாவில் இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் பயணிக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொல்கத்தாவின் ஹூக்ளி ஆறு வழியே இந்த மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதையானது ஆற்றின் கரையிலிருந்து 30 மீட்டர் அடியில் கட்டப்பட்டுள்ளது. அதில் 520 மீட்டர் அளவில் இரண்டு சுரங்கப்பாதைகளாக அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று கிழக்கு நோக்கியும் மற்றொன்று மேற்கு நோக்கியும் பயணிக்கவுள்ளது.
இந்த மெட்ரோ ரயிலானது அவுரா முதல் மஹாகரன் வரை மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லுமேயானால் இந்த ஆற்றுக்கு அடியிலான பாதையை ஒரு நிமிடத்தில் கடந்துவிடும்.

2035-ம் ஆண்டில் இந்த வழித்தடத்தில் ஒரு மில்லியன் பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மெட்ரோ ரயில் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

Loading...

இந்த ரயில் நிலை சேவை 2021 ஆண்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ”இந்த சுரங்கப்பாதையானது உலகின் சிறந்த தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. விரைவில் பயணிகளுக்காக இந்த சேவை திறக்கப்படும்” என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 
First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...